Posts

Showing posts from July, 2025

அறிமுகம் பகுதி-2 : என்னைச் செதுக்கிய வீரக்கலை

  எனது ஜிம் பட்டி நாட்கள் … நான் கோவை வடவள்ளியில் உள்ள சின்மையா வித்யாலயத்தில் படித்தேன் . காலை 9 மணிக்கு முன் பள்ளியில் இருந்தாக வேண்டும் .  எனது நாட்கள் அதிகாலையில் துவங்கும் . நான்கு மணிக்கு அப்பா எழுப்பி விடுவார் . சுமார் ஒரு மணி நேரம் யோகப்பயிற்சி . அதன் பின் அப்பா கடை திறக்கச் சென்றதும் காபி குடித்து விட்டு ஜிம் செல்வேன் .  ஏறக்குறைய இரண்டு அல்லது இரண்டரை மணி நேர பயிற்சி .  தம்பில்ஸ் , பார்பெல் , பேரலல் பார் , புல் அப் பார் , பென்ச் பிரஸ் , கரலை கட்டை என எடைப் பயிற்சிகள் நெட்டி முறிக்கும் . இடைக்கிடையே வெற்றி அண்ணா , நாகராஜ் அண்ணா ஆகியோரிடம் இருந்து சிலம்பம் மற்றும்   மல்லுக்கட்டு   பயிற்சி .  அதன் பின்  வடவள்ளியில் உள்ள  பள்ளிக்கு ஆறு   கிலோ மீட்டர்கள் சைக்கிள் மிதிக்க வேண்டும் . மாலை லிங்கனூர் சென்று டியூஷன் முடித்து விட்டு வீடு திரும்ப 7 ஆகி விடும் . திரும்பும் வழி 9 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் .  சாப்பிட்டு விட்டு மீண்டும் ஜிம் . மீண்ட...

எனது அறிமுகம்

வணக்கம்,  வீரக்கலை குறித்த எனது கண்ணோட்டங்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் துவங்கப்படும் இரண்டாவது வலைப்பூ இது என நினைக்கிறேன். முன்பும் இவ்வாறு ஒரு முயற்சியைத் துவங்கி பின் நேரமின்மை காரணமாக இடைநிறுத்தி உள்ளேன்.  இந்த முறை தொடர்ச்சியான இடைவெளியில் பதிவுகள் வெளியிட்டு வலைத்தளத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க தீர்மானித்துள்ளேன்.. இறைவனின் திருவுளப்படி நடக்கட்டும்.   0o0o00o0   சுய அறிமுகம்..!   81ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்த எனக்கு இன்றைய அளவில் 43 வயதாகின்றது. சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்துள்ள ஆனைகுடி. படித்ததெல்லாம் கோவையில். வீரக்கலை அறிமுகம் ஏற்பட்டது எனது 10ம் வயதில். பள்ளி விடுமுறைக்கு தாய்வழிப் பாட்டியின் சொந்த ஊருக்குச் சென்ற போது நாட்டுச் சுவடுகள் அறிமுகமானது. அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி இறுதித் தேர்வு விடுமுறைக் காலமான ஒன்றரை மாதங்களும் நாட்டுச் சுவடு பயிற்சியில் கழிந்தன.  11ம் வயதான போது கோவை பகுதியில் உள்ள ‘ஜிம் பட்டியில்’ சேர்த்து விட்டார் என் தந்தை. அங்கே சுப்பிரமணி ஐயாவின் மாணவர்கள் ந...

Test

Test Post