எனது ஜிம் பட்டி நாட்கள் … நான் கோவை வடவள்ளியில் உள்ள சின்மையா வித்யாலயத்தில் படித்தேன் . காலை 9 மணிக்கு முன் பள்ளியில் இருந்தாக வேண்டும் . எனது நாட்கள் அதிகாலையில் துவங்கும் . நான்கு மணிக்கு அப்பா எழுப்பி விடுவார் . சுமார் ஒரு மணி நேரம் யோகப்பயிற்சி . அதன் பின் அப்பா கடை திறக்கச் சென்றதும் காபி குடித்து விட்டு ஜிம் செல்வேன் . ஏறக்குறைய இரண்டு அல்லது இரண்டரை மணி நேர பயிற்சி . தம்பில்ஸ் , பார்பெல் , பேரலல் பார் , புல் அப் பார் , பென்ச் பிரஸ் , கரலை கட்டை என எடைப் பயிற்சிகள் நெட்டி முறிக்கும் . இடைக்கிடையே வெற்றி அண்ணா , நாகராஜ் அண்ணா ஆகியோரிடம் இருந்து சிலம்பம் மற்றும் மல்லுக்கட்டு பயிற்சி . அதன் பின் வடவள்ளியில் உள்ள பள்ளிக்கு ஆறு கிலோ மீட்டர்கள் சைக்கிள் மிதிக்க வேண்டும் . மாலை லிங்கனூர் சென்று டியூஷன் முடித்து விட்டு வீடு திரும்ப 7 ஆகி விடும் . திரும்பும் வழி 9 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் . சாப்பிட்டு விட்டு மீண்டும் ஜிம் . மீண்ட...
Comments
Post a Comment